Pak vs ban odi dream11 pr
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தான் vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
Pakistan vs Bangladesh Dream11 Prediction, ICC Champion Trophy 2025: ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இதனால் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த தொடரை நடத்தும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளன. இந்நிலையில் நாளை நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்காதேச அணிகள் தங்களின் கடைசி லீக் போட்டியில் விளையாடவுள்ளனர். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இரு அணிகளும் அடுத்தடுத்து தோல்விக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்வதால், இதில் எந்த அணி ஆறுதல் வெற்றியைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.