Pakistan tour australia 2024
AUS vs PAK, 1st T20I: மேக்ஸ்வெல் அதிரடி; பாகிஸ்தானுக்கு 94 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணியானது 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது இன்று தொடங்கியது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக இப்போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 7 ஓவர்களை கொண்ட போட்டியாக இது தொடங்கியது. அந்தவகையில் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
Related Cricket News on Pakistan tour australia 2024
-
AUS vs PAK, 3rd ODI: ஆஸ்திரேலியாவில் 22 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் தொடரை வென்று பாகிஸ்தான் சாதனை!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி சாதித்துள்ளது. ...
-
இந்த போட்டியில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் - முகமது ரிஸ்வான்!
பாகிஸ்தானைச் சேர்ந்த ரசிகர்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதிலுமிருந்து ஹாரிஸ் ராவுஃப் இவ்வாறு பந்துவீசுவதை அனைவரும் கண்டு மகிழ்கின்றனர் என்று பாகிஸ்தன் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ...
-
AUS vs PAK, 2nd ODI: அயூப், ஷஃபிக் அதிரடியில் ஆஸியை பந்தாடியது பாகிஸ்தான்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியுள்ளது. ...
-
AUS vs PAK, 2nd ODI: ஹாரிஸ் ராவுஃப் வேகத்தில் 163 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 163 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
பாகிஸ்தான் அணிக்காக புதிய சாதனை படைக்கவுள்ள பாபர் ஆசாம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பாபர் ஆசாம் சதம் அடித்தால், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த பாகிஸ்தான் வீரர் எனும் சாதனையை சமசெய்யவுள்ளார். ...
-
காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய நசீம் ஷா; பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். ...
-
அதிர்ஷ்டம் ஆஸ்திரேலியாவின் பக்கம் இருந்தது - முகமது ரிஸ்வான்!
எந்த சூழ்நிலை வந்தாலும் முயற்சியை கைவிடாமல் அணியின் வெற்றிக்காக போராட முடிவு செய்தோம். இதுபோன்ற கடினமான போட்டி குறித்து நீங்கள் ஏதும் விமர்சிக்க முடியாது என பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ...
-
AUS vs PAK, 1st ODI: பாகிஸ்தானை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
AUS vs PAK, 1st ODI: பாகிஸ்தானை 203 ரன்களில் சுருட்டியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரன முதல் ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 204 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எதிர்கொள்ள முடியாத பவுன்சரை வீசிய கம்மின்ஸ்; தடுமாறி விக்கெட்டை இழந்த காம்ரன் -வைரல் காணொலி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், காம்ரன் குலாமின் விக்கெட்டை வீழ்த்திய காணொளி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது ...
-
முதல் ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் அறிவிப்பு; அணிக்கு திரும்பும் நட்சத்திரங்கள்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
பாகிஸ்தன் டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் யார்?
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அணியின் கேப்டன் யார் என்பது குறிப்பிடப்படவில்லை. ...
-
பாகிஸ்தான் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; டெஸ்ட் வீரர்களுக்கு ஓய்வு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் 14 பேர் அடங்கியா ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
Pakistan Appoint Rizwan White-Ball Skipper, Azam Recalled For Australia tour
Pakistan appointed on Sunday Mohammad Rizwan as skipper for the white-ball tours of Australia and Zimbabwe, replacing Babar Azam who stepped down this month. ...