West indies tour sri lanka: Cricket News & Match Updates
SL vs WI, 3rd T20I: மெண்டிஸ், பெரேரா அதிரடியில் விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!
வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இந்நிலையில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் எவீன் லூயிஸ் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தர். பின்னர் இணைந்த பிராண்டன் கிங் மற்றும் ஷாய் ஹோப் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். Read More...