அறிமுக டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்தும் காணாமல் போன வீரர்கள்!
கிரிக்கெட்டின் மிகவும் கடினமான வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னை நிரூபிக்கும் வரை எந்த வீரரும் சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் பேச பட மாட்டார். இதில் விராட் கோலி, கேன் வில்லியம்சன் உள்ளிட்ட வீரர்களும் இது பொருந்தும். ஏனெனில் அவர்களில் டெஸ்ட் விளையாட்டு குறித்து தான் இன்று சர்வதேச கிரிக்கெட்டின் ஹாட் டாக்.
இருப்பினும், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு வீரரின் கனவும் நனவாகவில்லை. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்தில் சதமடித்த பிறகு காணாமல் போன 5 கிரிக்கெட் வீரர்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. ஷான் மார்ஷ்
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஷான் மார்ஷ். இவர் இங்கிலாந்து அணிக்கெதிராக 2011ஆம் ஆண்டு பல்லகேலேவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் மூலம் அறிமுகமானார்.
தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே ஷான் மார்ஷ் அதிரடியாக விளையாடி சதமடித்து 141 ரன்களைச் சேர்த்தார். ஆனால் அதன்பிறகு அவரால் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.
ஷான் மார்ஷ் இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,265 ரன்களை எடுத்துள்ளார். அவரது சராசரி 34.31 ஆகும்.
2.உமர் அக்மல்
ஒருகாலத்தில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்தவர் உமர் அக்மல். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானர்.
அப்போட்டியில் அவர் சதமடித்தது டன் 129 ரன்களைச் சேர்த்தார். ஆனால் அதன்பின் அவரது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவ்வளவாக அமையவில்லை.
இதையடுத்து அவர் கடைசியாக 2011ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடினார்.
உமர் அக்மல் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி 35.68 சராசரியுடன் 1,003 ரன்கள் எடுத்துள்ளார்.
3. சுரேஷ் ரெய்னா
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. இவர் 2010ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான கொழும்பு டெஸ்டில் அறிமுகமானார்.
இப்போட்டியில் சுரேஷ் ரெய்னா சதம் அடித்து அசத்தினார். இப்படி அறிமுக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்த இருந்த சுரேஷ் ரெய்னா அதன்பின், வெறும் 18 போட்டிகளில் மட்டுமே தான் பங்கேற்க முடிந்தது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த சுரேஷ் ரெய்னா, இதுவரை இந்திய அணிக்காக 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 768 ரன்களை எடுத்துள்ளார்.
4. டுவைன் ஸ்மித்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டுவைன் ஸ்மித். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு கேப் டவுன் டெஸ்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
அறிமுகமான ஆட்டத்திலேயே அதிரடியாக விளையாடி டுவைன் ஸ்மித் 105 ரன்கள் எடுத்தார். இப்படி இருந்தும், ஸ்மித் தனது முழு டெஸ்ட் வாழ்க்கையில் இதுவரை 10 போட்டிகளில் மட்டுமே விளையாடி, 320 ரன்கள் எடுத்துள்ளார்.
5. கீடன் ஜென்னிங்ஸ்
இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் கீடன் ஜென்னிங்ஸ். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
அப்போட்டியில் ஜென்னிங்ஸ் 112 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இருப்பினும் அவர் தனது வாழ்நாளில் வெறும் 17 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது.