Afghanistan tour zimbabwe
ஜிம்பாப்வேவை வீழ்த்தி டி20 தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது ஹராரேவில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஃப்கானிஸ்தானை பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் - தியான் மேயர்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தியான் மேயர்ஸ் 6 ரன்னிலும், பிரையன் பென்னட் 16 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய பிராண்டன் டெய்லரும் 3 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய சிக்கந்தர் ரஸா ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய ரியான் பார்ல் 10 ரன்னிலும், முனியங்கா 19 ரன்னிலும், தஷிங்கா முசெகிவ 13 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Related Cricket News on Afghanistan tour zimbabwe
-
ZIM vs AFG, 3rd T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தன் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. ...
-
ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தன், மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (டிசம்பர் 14) ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ZIM vs AFG, 2nd T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை சமன்செய்தது ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தன், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ZIM vs AFG, 1st T20I: ஆஃப்கானை வீழ்த்தி ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தன், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - ஆஃப்கனிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் போட்டியானது நாளை டிசம்பர் 11ஆம் தேதி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
अफगानिस्तान ने किया जिम्बाब्वे दौरे के लिए टीम का ऐलान, मुजीब उर रहमान की टीम में वापसी
अफगानिस्तान ने आगामी जिम्बाब्वे दौरे के लिए अपनी टीम का ऐलान कर दिया है। इस टीम में स्टार स्पिनर मुजीब उर रहमान की वापसी हुई है। ...