Mumbai vs karnataka
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: மும்பையை வீழ்த்தி கர்நாடகா அபார வெற்றி!
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற குரூப் சி அணிகளுக்கு இடையேயான முதல் சுற்று ஆட்டத்தில் மும்பை மற்றும் கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி 6 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஆயுஷ் மாத்ரே மற்றும் ஹர்திக் தோமர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்த நிலையில், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் 78 ரன்கள் எடுத்த கையோடு ஆயுஷ் மத்ரே தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 84 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் தோமரும் விக்கெட்டை இழந்தார்.