Shivam dube: Cricket News & Match Updates
ரஞ்சி கோப்பை 2025: விதர்பா 383 ரன்களில் ஆல் அவுட்; பேட்டிங்கில் தடுமாறும் மும்பை!
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று தொடங்கிய இரண்டாவது அரையிறுதி போட்டியில் விதர்பா மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்ப அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய விதர்பா அணியில் தொடக விரர்கள் சோபிக்க தவறிய நிலையில் அடுத்து களமிறங்கிய துருவ் ஷோரே - டேனிஷ் மாலேவார் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். பின்னர் 9 பவுண்டரிகளுடன் 74 ரன்களைச் சேர்த்த கையோடு துருவ் ஷோரே தனது விக்கெட்டை இழந்த நிலையில், அவரைத்தொடர்ந்து 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 79 ரன்களை எடுத்திருந்த நிலையில் டேனிஷ் மாலேவாரும் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கருண் நாயர் மற்றும் யாஷ் ரத்தோட் இணை சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். Read More...