Sophie molineux: Cricket News & Match Updates
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸை பந்தாடி ஆர்சிபி அணி அபார வெற்றி!
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைற்ற 5ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஹர்லீஜ் தியோல் - கேப்டன் பெத் மூனி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பெத் மூனி 8 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய போப் லிட்ச்ஃபீல்ட் 5 ரன்களிலும், வேதா கிருஷ்ணமூர்த்தி 9 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப நிலையில், மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த ஹர்லீன் தியோல் 22 ரன்கள் எடுத்த நிலையில் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அவரைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஆஷ்லே கார்ட்னர் 7 ரன்களுக்கும், கேத்ரின் பிரைஸ் 3 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார். Read More...