Sri lanka tour zealand
NZ vs SL, 1st T20I: மிட்செல், பிரேஸ்வெல் அரைசதம்; இலங்கை அணிக்கு 173 ரன்கள் டார்கெட்!
இலங்கை அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் ராபின்சன் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிம் ராபின்சன் 11 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா 8 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய மார்க் சாப்மேன் 15 ரன்களுக்கும், கிளென் பிலீப்ஸ் 8 ரன்களுக்கும், மிட்செல் ஹெய் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் நியூசிலாந்து அணி 65 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Related Cricket News on Sri lanka tour zealand
-
நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இலங்கை டி20, ஒருநாள் தொடர்களுக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
இலங்கை டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
நியூசிலாந்து டி20 தொட்ருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago
-
- 6 days ago