Adkr vs sw: Cricket News & Match Updates
ஐஎல்டி20 2025: நைட் ரைடர்ஸை பந்தாடியது எமிரேட்ஸ்!
ஐஎல்டி20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் மற்றுன் எம்ஐ எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய எமிரேட்ஸ் அணிக்கு குசால் பெரேரா - முஹ்மத் வசீம் இருவரும் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 42 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் குசால் பெரேரா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டாம் பாண்டன் 9 ரன்களுக்கும், முஹ்மது வசீம் 38 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய கீரன் பொல்லார்ட் 5 ரன்களிலும், டேன் மௌஸ்லி 6 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் நிக்கோலஸ் பூரன் மற்றும் ரோமாரியோ ஷெஃபர்ட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். Read More...