Aiden markram: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எம்ஐ கேப்டவுன் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதையடுத்து இத்தொடரில் நேற்று நடைபெற்ற வரும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செஞ்சூரியனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு டேவிட் பெடிங்ஹாம் - டோனி டி ஸோர்ஸி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியாக தொடங்கியதுடன் முதல் விக்கெட்டிற்கு 46 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 14 ரன்களை எடுத்திருந்த டோனி டி ஸோர்ஸி தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 27 ரன்களைச் சேர்த்திருந்த டேவிட் பெடிங்ஹாமும் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஜோர்டன் ஹார்மன் 12, டாம் அபெல் 10 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். Read More...