Aus vs pak records: Cricket News & Match Updates
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Australia vs Pakistan 2nd T20I Dream11 Prediction: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் அணி தற்சயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது அபாரமான வெற்றியைப் பதிவுசெய்துள்ளதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகித்துள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றவுள்ளது. இதில் ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ள உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம் பாகிஸ்தான் அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன், தொடரையும் சமன்செய்ய இந்த வெற்றியானது அவசியமாகும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று அசத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். Read More...