Ben duckett: Cricket News & Match Updates
பிபிஎல் 2024-25: டெக்கெட், ஸ்டொய்னிஸ் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெற்றி!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 23ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மெல்ப்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு ஜோஷ் பிரௌன் மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜோஷ் பிரௌன் 6 ரன்னிலும், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 12 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டிம் செய்ஃபெர்டும் 17 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதனால் அந்த அணி 53 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த ஜேக்கப் பெத்தெல் மற்றும் ஜோனதன் வெல்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். Read More...