Advertisement
Cricket australia: Cricket News & Match Updates
Advertisement
பாட் கம்மின்ஸின் தாயர் காலமானார்; கருப்பு பட்டை அணிக்கு வீரர்கள் இரங்கள்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தாயார் உடல் குறைவு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஆஸி., வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் கையில் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடுவார்கள் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாட் கம்மின்ஸ் தாயார் மரியா கம்மின்ஸ், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து, பாட் கம்மின்ஸ் டெல்லி டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஆஸ்திரேலியா சென்றார். அதன் பிறகு அவர் தனது தாயாருடன் நேரத்தை செலவழித்தார். இந்நிலையில், மரியா கம்மின்ஸ் இன்று காலமானார். Read More...
Related Cricket News for Cricket australia - Tesst
IND vs AUS: காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் ஜெய் ரிச்சர்ட்சன்!
ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சன், காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸ்திரேலிய தேர்வுகுழுவை கடுமையாக விமர்சித்த சுனில் கவஸ்கர்!
முழு உடற்தகுதி இல்லாத வீரர்களை தேர்வுசெய்துள்ளதாக ஆஸ்திரேலிய தேர்வுக்குழு மீது சுனில் கவாஸ்கர் கடும் கண்டனங்களை தெரிவித்திருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: நான்காவது டெஸ்டிலிருந்தும் விலகினார் பாட் கம்மின்ஸ்!
ஆமதாபாத்தில் நடைபெறவுள்ள கடைசி டெஸ்டில் இருந்தும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டேவிட் வார்னர் ஓய்வை அறிவித்திருக்கலாம் - ரிக்கி பாண்டிங்!
36 வயதாகும் டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்நேரம் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அதிரடியாக பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஸ்மித்க்கு கேப்டன் பதவி வழங்காதது நியாயமற்றது - சல்மான் பட்!
ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் விருப்பம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பாட் கம்மின்ஸை வீட்டிலேயே இருங்கள் என்று சொல்லுவேன் - ஜேஷன் கில்லஸ்பி!
குடும்பம் மற்றும் நண்பர்கள் மேலும் உடல் நலம் சரியில்லாத தயாருடன் இருப்பதைவிட தொடரை இழந்துவிட்ட நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது முக்கியமா என்று கேட்டால் நிச்சயம் முக்கியம் கிடையாது என ஜேஷன் கில்லஸ்பி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸ்திரேலிய அணி சிறப்பாக போராடியது - கிளென் மேக்ஸ்வெல்!
இந்தியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் படுதோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், அந்த அணிக்கு ஆதரவாக கிளென் மேக்ஸ்வேல் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பாட் கம்மின்ஸ் கேப்டன்சியிலிருந்து விலக வேண்டும் - இயான் ஹீலி!
கம்மின்ஸ் நீண்ட காலம் கேப்டன் பதவியை சுமந்து கொண்டிருப்பதை நான் விரும்பவில்லை. அவர் ஒரு பந்துவீச்சாளராக முடிப்பதையே நான் விரும்புகிறேன் என முன்னாள் வீரர் இயான் ஹீலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 3rd Test: குடும்ப சூழ்நிலை காரணமாக டெஸ்டிலிருந்து கம்மின்ஸ் விலகல்!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இருந்து குடும்ப சூழ்நிலை காரணமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: ஆஸி ஒருநாள் அணி அறிவிப்பு; மேக்ஸ்வெல், மார்ஷுக்கு இடம்!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான 16 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸ்திரேலிய அணிக்கு அட்வைஸ் வழங்கிய இயன் சேப்பல்!
அஸ்வின் மற்றும் ஜடேஜாவை போல ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் முயற்சிக்க வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸிக்கு மேலும் ஒரு அடி; நாடு திரும்பும் ஆஷ்டன் அகர்!
ஆஸ்திரேலியச் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர், உள்ளூர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக இந்தியாவிலிருந்து உடனடியாகத் தனது நாட்டுக்குத் திரும்பவுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
எப்படி இருந்திருந்தாலும் இந்திய அணி இத்தொடரை வெல்லும் - ஹர்பஜன் சிங் கருத்து!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தத் தொடர் 10 போட்டிகளைக் கொண்டிருந்தாலும், 10 போட்டிகளையுமே இந்தியா வெல்லும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸ்திரேலியாவுக்கு உதவ தயார் - மேத்யூ ஹேடன்!
இந்தியச் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளத் தடுமாறும் ஆஸ்திரேலிய அணி பேட்டர்களுக்கு உதவத் தயார் என முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement