Dinesh chandimal: Cricket News & Match Updates
SA vs SL, 2nd Test: சதத்தை தவறவிட்ட நிஷங்கா; முன்னிலை நோக்கி இலங்கை அணி!
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி க்கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை.
அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஐடன் மார்க்ரம், டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த ரியான் ரிக்கெல்டன் - கேப்டன் டெம்பா பவுமா இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து அபாரமாக விளையாடியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். இதில் டெம்பா பவுமா 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 78 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டேவிட் பெட்டிங்ஹாமும் 6 ரன்னுடன் ஆட்டமிழந்தார். Read More...