Icc t20 world cup 2024: Cricket News & Match Updates
T20 WC 2024: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி பாட் கம்மின்ஸ் சாதனை - வைரலாகும் காணொளி!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் நேருக்கு நேர் மோதின. ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபற்ற இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு டாப் ஆர்டர் வீரர்கள் தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ், ரிஷாத் ஹொசைன் அகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த கேப்ட்ன நஜ்முல் ஹொசைன் சாண்டோ - தாவ்ஹித் ஹிரிடோய் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாண்டோ 41 ரன்களிலும், ஹிரிடோய் 40 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். Read More...