Joburg super kings vs paarl royals: Cricket News & Match Updates
ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்ட தினேஷ் கார்த்திக் - வைரலாகும் காணொளி!
எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுடன் 40 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அணியை சரிவிலிருந்து மீட்டார்.
இதன்மூலம் பார்ல் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 53 ரன்களையும், ரூபின் ஹர்மன் 28 ரன்களையும் சேர்த்தனர். சூப்பர் கிங்ஸ் தரப்பில் டோனோவன் ஃபெரீரா மற்றும் லுதோ சிபம்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சூப்பர் கிங்ஸ் அணியில் டெவான் கான்வே 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். Read More...