Kusal perera: Cricket News & Match Updates
NZ vs SL, 3rd T20I: சதமடித்து மிரட்டிய குசால் பெரேரா; நியூசிலாந்துக்கு 219 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது.. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டியிலும் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது.இதையடுத்து நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜனவரி 02) நெல்சனில் உள்ள சாக்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இப்போட்டிக்கான இலங்கை அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், நியூசிலாந்து அணியில் எந்த மாற்றமும் இல்லை. அதன்பின் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பதும் நிஷங்கா 14 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரர் குசால் மெண்டிஸும் 22 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். Read More...