Kwena maphaka: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2025: ஸ்டொய்னிஸ் அரைசதம்; ராயல்ஸுக்கு 144 ரன்கள் டார்கெட்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் பிராண்டன் கிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி காக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த நிலையில், அவரைத்தொடர்ந்து 3 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு பிராண்டன் கிங்கும் விக்கெட்டை இழந்தார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய பிரைஸ் பெர்சன்ஸும் 16 ரன்களை மட்டுமே சேர்த்த கையோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 33 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. Read More...