Lahore qalandars: Cricket News & Match Updates
பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகிய ரஷித் கான்; ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா?
ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். இவர், ஆஃப்கானிஸ்தான் அணிக்காக 187 சர்வேதேச போட்டிகளில் விளையாடி 350க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும், 1700க்கும் அதிகமான ரன்களையும் குவித்துள்ளார். அதுமட்டுமின்றி உலகில் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் டி20 லீக் போட்டியில் பங்கேற்றுவரும் ரஷித் கான் இதுவரை 556 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இந்நிலையில் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் தனது முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த ரஷித் கான் தற்போது அதிலிருந்து குணமடைந்து வருகிறார். இருப்பினும் அவரது காயம் முழுமையாக குணமடையாததால் பிக் பேஷ் லீக், எஸ்ஏ20 லீக் , ஐஎல் டி20 என உலகின் முக்கிய டி20 லீக் தொடர்களில் இருந்து விலகிய அவர், சமீபத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான சர்வதேச டி20 தொடரிலிருந்து விலகினார். Read More...