Nz vs sl 3rd t20i
NZ vs SL, 3rd T20I: நியூசிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பதிவுசெய்தது இலங்கை!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது.. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டியிலும் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது.இதையடுத்து நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜனவரி 02) நெல்சனில் உள்ள சாக்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பதும் நிஷங்கா 14 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரர் குசால் மெண்டிஸும் 22 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய குசால் பெரேரா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 17 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
Related Cricket News on Nz vs sl 3rd t20i
-
NZ vs SL, 3rd T20I: சதமடித்து மிரட்டிய குசால் பெரேரா; நியூசிலாந்துக்கு 219 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 219 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நியூசிலாந்து vs இலங்கை, மூன்றாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (ஜனவரி 02) நெல்சனில் உள்ள சாக்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
NZ vs SL, 3rd T20I: பரபரப்பான ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
இலங்கைக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது. ...
-
NZ vs SL 3rd T20I – Tim Seifert or Wanindu Hasaranga? Check Dream11 Fantasy Team, C-VC Options Here
New Zealand will clash against Sri Lanka in the decider T20I of the 3-match series in Queenstown on April 8th. ...