Roston chase: Cricket News & Match Updates
ஃபோர்டை ரன் அவுட் செய்த ரோஸ்டன் சேஸ்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள முதலிரண்டு ஒருநால் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்ததுடன், 24.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 86 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக அலிக் அதானாஸ் 32 ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸேவியர் பார்ட்ல்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். Read More...