Slw vs saw: Cricket News & Match Updates
வோல்வார்ட், பிரிட்ஸ் அதிரடியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்கா- இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான ஐசிசி மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டி நேற்று கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்பின் இப்போட்டியின் போது மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் கேப்டன் சமாரி அத்தபத்து 11 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஹாசினி பெரேராவும் 4 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
மேற்கொண்டு களமிறங்கிய கவிஷா தில்ஹாரி 14 ரன்னிலும், ஹர்ஷித்ரா மாதவி 13 ரன்னிலும், நிலாக்ஷி டி சில்வா 18 ரன்னிலும், அனுஷ்கா சஞ்சீவனி ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, மற்றொரு தொடக்க வீராங்கனையான விஷ்மி குனரத்னே 34 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 105 ரன்களை மட்டுமே சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மிலாபா 3 விக்கெட்டுகளையும், மசபடா கிளாஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். Read More...