Srh vs csk: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: பேட்டர்கள் தடுமாற்றம்; ஹைதராபாத் அணிக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சிஎஸ்கே!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர்.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா 12 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் ருதுராஜுடன் இணைந்த அஜிங்கியா ரஹானே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டார். அதன்பின் அதிரடி காட்ட தொடங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 23 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். Read More...