Tn vs ngl: Cricket News & Match Updates
விஜய் ஹசாரே கோப்பை 2023: வருண், சாய் கிஷோர் சுழலில் வீழ்ந்தது நாகாலாந்து; காலிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு!
இந்தியாவில் உள்ளூரு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசரே கோப்பை நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஈ பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் நாகாலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையிலுள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
அதன்படி களமிறங்கிய நாகாலாந்து அணி ஆரம்பம் முதலே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் ஜோஷுவா 13, ஷாம்வாங் வாங்னாவ் 1, ஓரேன் நகுல்லி 1, சுமித் குமார் 20, கேப்டன் ஜோனதன் 5 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் தமிழ்நாடு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர். Read More...