Towhid hridoy: Cricket News & Match Updates
BAN vs ZIM, 1st T20I: தன்ஸித் ஹசன், தாவ்ஹித் ஹிரிடோய் அதிரடியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது வங்கதேசம்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் அதற்கு தயாராகி வருகின்றன. அந்தவகையில் ஜிம்பாப்வே அணியும் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது சட்டோகிராமில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர் கிரேக் எர்வின் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான ஜெய்லார்ட் கும்பியும் 17 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்ப, அவரைத்தொடர்ந்து பிரையன் பென்னட்டும் 16 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர்கள் கேப்டன் சிக்கந்தர் ரஸா, சீன் வில்லியம்ஸ் மற்றும் ரியான் பார்ல் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர். Read More...