Usa vs sa: Cricket News & Match Updates
T20 WC 2024, Super 8: ஆண்ட்ரிஸ் கௌஸ் போராட்டம் வீண்; அமெரிக்காவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றிருத இத்தொடரில் தற்போது 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதன்படி இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து அமெரிக்க அணியான பலப்பரீட்சை நடத்தியது. ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் ரீஸா ஹென்றிக்ஸ் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் ரிஸா ஹென்றிக்ஸ் 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் டி காக்குடன் இணைந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். மறுபக்கம் தொடக்க வீரராக களமிறங்கிய குயின்டன் டி காக் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். Read More...