Abf vs br: Cricket News & Match Updates
புவனேஷ்வர் குமாரின் மெய்டன் சாதனையை உடைத்த முகமது அமீர்!
கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசனில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிக்காக விளையாடி வரும் முகமது அமீர், டி20யில் இந்திய பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரை வீழ்த்தி பெரிய சாதனை படைத்தார். அதன்படி இத்தொடரின் 13ஆவது போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் அணிக்கு எதிராக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அமீர் 2.3 ஓவர்களில் 11 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன் போது அவர் மெய்டன் ஓவரையும் வீசினார்.
இதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசியவர் என்ற பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரையும் பின்னுக்கு தள்ளியுள்ளார். அதன்படி, இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் 286 டி20 இன்னிங்ஸ்களில் 24 மெய்டன் ஓவர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார். அதேசமயம் முகமது அமீர் 302 இன்னிங்ஸ்களில் 25 மெய்டன் ஓவர்கள் வீசி தற்போது மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். Read More...
Related Cricket News for Abf vs br - Tesst
T20 क्रिकेट में भुवनेश्वर कुमार को पछाड़ते हुए पाकिस्तानी तेज आमिर ने बनाया ये महारिकॉर्ड
சிபிஎல் 2024: அதிரடியில் மிரட்டிய டி காக்; பார்படாஸ் ராயல்ஸ் அபார வெற்றி!
ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16