Br vs abf: Cricket News & Match Updates
சிபிஎல் 2024: மழையால் பாதித்த ஆட்டம்; ஃபால்கன்ஸை டிஎல்எஸ் முறையில் வீழ்த்தியது ராயல்ஸ்!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் 12ஆவது சீசனில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்படாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஃபால்கன்ஸ் அணிக்கு பிராண்டன் கிங் மற்றும் ஜஸ்டீன் கிரீவ்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டிற்கு 55 ரன்களைச் சேர்த்தனர்.
அதன்பின் பிராண்டன் கிங் 27 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சாம் பில்லிங்ஸும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதில் அபாரமாக விளையாடி வந்த ஜஸ்டின் க்ரீவ்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் அபாரமாக விளையாடிய சாம் பில்லிங்ஸும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாம் பில்லிங்ஸ் ஆட்டமிழ்கக, அடுத்து வந்த ஃபேஃபியன் ஆலன், கிறிஸ் கிரீன், பிரிமஸ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். Read More...