David warner: Cricket News & Match Updates
AUS vs WI, 1st T20I: பரபரப்பான ஆட்டத்தில் விண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று ஹபார்ட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - ஜோஷ் இங்கிலிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர்கள் இருவரும் சேர்ந்து அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அதேசமயம் மறுபக்கம் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 39 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் இங்கிலிஸ் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். Read More...