Fakhar zaman run out: Cricket News & Match Updates
ரன் அவுட்டாகி அரைசதத்தை தவறவிட்ட ஃபகர் ஸமான் - காணொளி
வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் ஃபகர் ஸமான் 44 ரன்களையும், அப்பாஸ் அஃப்ரிடி 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியில் தன்ஸிம் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் உள்ளிட்டோர் சோபிக்கத் தவறினர். இருப்பினும் பர்வெஸ் ஹொசைன் எமான் 56 ரன்களையும், தாவ்ஹித் ஹிரிடோய் 36 ரன்களைம் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூல்ம் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. Read More...
Related Cricket News for Fakhar zaman run out - Tesst
गरीबी में आटा गीला! पाकिस्तान की हालत वैसे ही पतली थी और खुशदिल की गड़बड़ी ने डटे हुए बल्लेबाज फखर को भी डुबो दिया; VIDEO
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16