Hasan mahmud: Cricket News & Match Updates
1st Test, Day 1: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்தியா; சரிவிலிருந்து மீட்ட யஷஸ்வி, ரிஷப்!
வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்று தொடங்கியது. அந்தவகையில் இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இப்போட்டிக்கான இந்திய அணியில் வழக்கத்திற்கு மாறாக ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடனும் களமிறங்கிவுள்ளது. இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கபட்ட ரோஹித் சர்மா 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஹசன் மஹ்மூத் பந்துவீச்சில் நஜ்முல் ஹொசைன் சாண்டோவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். Read More...