Icc t20 world cup 2024: Cricket News & Match Updates
தொடரின் மிகச்சிறந்த கேட்ச்சை பிடித்த அகிப் இலியாஸ்; வைரலாகும் காணொளி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்படாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 12 ரன்களிலும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 14 ரன்களிலும், கிளென் மேக்ஸ்வெல் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் இணைந்த டேவிட் வார்னர் - மார்கஸ் ஸ்டொய்னிஸ் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 4ஆவது விக்கெட்டிற்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் அதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 27 பந்துகளிலும், டேவிட் வார்னர் 46 பந்துகளிலும் தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்தனர். அதன்பின் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 56 ரன்களைச் சேர்த்திருந்த டேவிட் வார்னர் ஆட்டமிழந்தார். Read More...