Indu19 vs slu19: Cricket News & Match Updates
யு19 ஆசிய கோப்பை 2024: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் அண்டர்19 வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஷார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கமானது கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் துல்நித் சிகெரா 2 ரன்னிலும், புலிந்து பெரேரா 6 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விமத் தின்சராவும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் இலங்கை யு19 அணியானது 8 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த சாருஜன் சண்முகநாதன் மற்றும் லக்வின் அபேசிங்க இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுதியதுடன், அணிக்கு தேவையான ரன்களையும் சேர்த்தனர். Read More...
Related Cricket News for Indu19 vs slu19 - Tesst
யு19 ஆசிய கோப்பை 2024: இலங்கையை 173 ரன்களில் சுருட்டியது இந்தியா!
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago