Jsk vs pr dream11 prediction: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2025: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs பார்ல் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Joburg Super Kings vs Paarl Royals Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 26ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் பார்ல் ராய்ல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நடப்பு எஸ்ஏ20 தொடரில் டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணி விளையாடிய 8 போட்டிகளில் 7 வெற்றிகளைப் பதிவுசெய்து அசத்தியதுடன் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பத்தில் வெற்றிகளை பதிவுசெய்தாலும், தொடரின் இறுதிக்கட்டத்தில் அடுத்தடுத்த தோல்விகளைத் தழுவி பிளே ஆஃப் வாய்ப்பை கடினமாக்கியுள்ளது. இதனால் இனி வரும் போட்டிகளில் அந்த அணி வெற்றியைப் பதிவுசெய்தால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...