Knso vs th: Cricket News & Match Updates
எல்எல்சி 2024 குவாலிஃபையர் 2: பரபரப்பான ஆட்டத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஒடிசா!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த் வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரண்டாவது அணி எது என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டம் நேற்று நடைபெற்றது .
இப்போட்டியில் கொனார்க் சூர்யாஸ் ஒடிசா அணியும், தோயம் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஒடிசா அணிக்கு ரிச்சர்ட் லெவி மற்றும் முனவீரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரிச்சர்ட் லெவி 6 ரன்களிலும், மனவீரா 18 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நவீன் ஸ்டெவர்ட்8 ரன்களுக்கும், யூசுஃப் பதான் 12 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் இணைந்த கெவின் ஓ பிரையன் மற்றும் கேப்டன் இர்ஃபான் பதான் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியி இறங்கினர். Read More...