Mohammad hafeez: Cricket News & Match Updates
PSL 2023: பவுண்டரி மழை பொழிந்த ஜேசன் ராய்; குயிட்டா கிளாடியேட்டர்ஸ் சாதனை வெற்றி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல்பிண்டியிலுள்ள பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பெஷாவர் ஸால்மி அணியின் கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
அதன்படி பெஷாவர் அணிக்கு பாபர் ஆசாம் - சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தொடர்ந்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசி தள்ளினர். இதன்மூலம் இருவரும் அரைசதம் கடந்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 162 ரன்களையும் பார்ட்னர்ஷிப் முறையில் சேர்த்தன. இதில் அயூப் 34 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 74 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். Read More...