Ms vs pz: Cricket News & Match Updates
பிஎஸ்எல் 2025: முல்தான் சுல்தான்ஸை பந்தாடியது பெஷாவர் ஸால்மி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ராவல்பிண்டியில் நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பெஷாவர் அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தலா 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த டாம் கொஹ்லர் காட்மோர் மற்றும் முகமது ஹாரிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் காட்மோர் தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்தார். இதன்மூலம் இருவரும் இணைந்து 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் முகமது ஹாரிஸ் 45 ரன்னில் விக்கெட்டை இழந்தார். Read More...