Nathan lyon: Cricket News & Match Updates
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: அஸ்வினை முந்தினார் நாதன் லையன்!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
ஆனாலும் கடைசிவரை களத்தில் இருந்த கேமரூன் க்ரீன் அபாரமான ஆட்டத்த வெளிப்படுத்து சதமடித்ததுடன், 23 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 174 ரன்களைக் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்களைச் சேர்த்து வலுவான நிலையில் ஆல் அவுட்டானது. இதையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் கிளென் பிலீப்ஸின் சிறப்பான ஆட்டத்தினால் முதல் இன்னிங்ஸில் 179 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லையன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். Read More...