Pakw vs slw: Cricket News & Match Updates
மகளிர் ஆசிய கோப்பை 2024: சதியா இக்பால், ஃபாத்திமா சனா அசத்தல் பந்துவீச்சு; இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முனீபா அலி - குல் ஃபெரோசா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குல் ஃபெரோசா 2 ரன்களிலும், முனீபா அலி 12 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய சித்ரா அமீன் 12 ரன்களுக்கும், ஒமைமா சோஹைல் 18 ரன்களுக்கும், துபா ஹசன் 5 ரன்களுக்கும் என சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழக்க, பாகிஸ்தான் அணி 57 ரன்களில் 4 விக்கெட்டுகாளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த நிதா தார் மற்றும் ஃபாத்திமா சனா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். Read More...