Pat cummins: Cricket News & Match Updates
இந்த தோல்வியில் இருந்து எங்களால் மீண்டு வர முடியும் - பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோரது அரைசதத்தின் மூலமும், ஷிவம் தூபேவின் அபாரமான ஃபினிஷிங்கின் மூலமும் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 98 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 52 ரன்களையும், ஷிவம் தூபே 39 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர்கள் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, சன்ரைசர்ஸ் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகன் விருதை வென்றார். Read More...