Piyush chawla picks his all time ipl xi: Cricket News & Match Updates
தனது ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்த பியூஷ் சாவ்லா!
இந்தியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா. இவர் இந்திய அணிக்காக 2006ஆம் ஆண்டு அறிமுகமான பியூஷ் சாவ்லா இதுவரி 3 டெஸ்ட், 25 ஒருநாள் மற்றும் 7 டி20 போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதேசமயம் ஐபிஎல் தொடரில் கடந்த 2008ஆம் ஆண்டில் இருது விளையாடி வரும் அவர் இதுவரை 192 போட்டிகளில் விளையாடி 192 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது ஆல் டைம் சிறந்த ஐபிஎல் அணியின் லெவனை பியூஷ் சாவ்லா தேர்வு செய்துள்ளார். அதன்படி அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயிலை தேர்வு செய்த அவர், மூன்றாம் வரிசையில் விராட் கோலியையும், நான்காம் வரிசையில் சூர்யகுமார் யாதவையும் தேர்வு செய்துள்ளார். அதைத்தொடர்ந்து 5ஆவது இடத்திற்கு தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸை தேர்வு செய்துள்ளார். Read More...