Ravichandran ashwin: Cricket News & Match Updates
இந்தியாவில் நல்ல வீரர்கள் மேம்படுத்தப்படுவதில்லை - அஸ்வின் பளீர்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 480 ரன்களை குவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் இந்த இமாலய ஸ்கோருக்கு முக்கிய காரணமாக இருந்தது உஸ்மான் கவாஜா - கேமரூன் கிரீன் ஆகியோர் தான். 170 ரன்களுக்கு 4 விக்கெட்கள் சென்றுவிட்ட சூழலில் 5ஆவது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 208 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
சிறப்பாக விளையாடிய உஸ்மான் கவாஜா 180 ரன்களை அடித்தார். மறுபுறம் கேமரூம் கிரீன் 114 ரன்களை விளாசினார். 23 வயதாகும் கேமரூன் கிரீன் இதுவரை 28 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள போதும் இது தான் அவரது முதல் சதமாகும். அதுவும் இந்தியாவில் வந்துள்ளது. இந்த போட்டியில் 6 விக்கெட்களை வீழ்த்திய அசத்திய அஸ்வின் தான் கேமரூன் கிரீனையும் இறுதியில் கட்டுப்படுத்தினார். Read More...