Shadman islam: Cricket News & Match Updates
PAK vs BAN, 1st Test: அரைசதம் கடந்த ஷாத்மன் இஸ்லாம்; தடுமாறும் வங்கதேச அணி!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டியில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் ஆப்துல்லா ஷஃபிக், கேப்டன் ஷான் மசூத் மற்றும் பாபர் ஆசாம் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் அரைசதம் கடந்திருந்த சைம் அயூப் 56 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் ஜோடி சேர்ந்த சௌத் ஷகீல் - முகமது ரிஸ்வான் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்களது சதங்களையும் பதிவு செய்ததுடன் 240 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 141 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சௌத் ஷகீல் விக்கெட்டை இழக்க, அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த முகமது ரிஸ்வான் 171 ரன்களைச் சேர்த்து அசத்தினார். Read More...