Tushar deshpande: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: ஜடேஜா, தேஷ்பாண்டே பந்துவீச்சில் 137 ரன்களில் சுருண்டது கேகேஆர்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சென்னையிலுள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பில் சால்ட், சிஎஸ்கே வீரர் துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த சுனில் நரைன் - அறிமுக வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிவந்த இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் முறையில் 56 ரன்களைச் சேர்த்தனர். அதன்பின் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 24 ரன்கள் எடுத்திருந்த அங்கிரிஷ் ரகுவன்ஷியும், 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 27 ரன்கள் எடுத்திருந்த சுனில் நரைனும் அடுத்தடுத்து ரவீந்திர ஜடேஜா ஓவரில் விக்கெட்டை இழந்தனர். Read More...