Ausw vs nzw 3rd t20i: Cricket News & Match Updates
AUSW vs NZW, 3rd T20I: நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் அடுத்த மாதம் முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் மற்ற நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.
அதன் ஒருபகுதியாக நியூசிலாந்து மகளிர் அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவிலும் ஆஸ்திரேலிய மகளிர் அணியானது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பிரிஸ்பேனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. Read More...