David warner: Cricket News & Match Updates
டி20 உலகக்கோப்பை: இணையத்தில் வைரலாகும் டேவிட் வார்னரின் கேட்ச்!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 12 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்காக நிசங்கா 40 ரன்கள், அசலங்கா 38 ரன்கள் மற்றும் தனஞ்ஜெயா 26 ரன்கள் எடுத்திருந்தனர்.
158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. இருந்தும் வார்னர் 11 ரன்களில் வெளியேறினார். மிட்செல் மார்ஷ், 17 ரன்கள் எடுத்து அவுட்டானார். மேக்ஸ்வெல், 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் களம் இறங்கிய ஸ்டாய்னிஸ் 18 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து மிரட்டினார். 4 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். Read More...