England vs australia
ஆஷஸ் 2023: ஆஸிக்கு 280 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கி.!
பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 78 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 393 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதியில் ஜோ ரூட் 152 பந்துகளில், 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 118 ரன்கள் விளாசினார். கைவசம் 2 விக்கெட்கள் இருந்த போதிலும் முதல் நாளிலேயே இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிக்ளேர் முடிவை எடுத்தது ஆச்சரியமாக இருந்தது.
இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய உஸ்மான் கவாஜாவின் அபாரமான சதத்தாலும், அலெக்ஸ் கேரி, டிராவிஸ் ஹெட் ஆகியோரது அரைசதத்தின் மூலமாகவும் 386 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், ஒல்லி ராபின்சன் தலா 3 விக்கெட்டுகளையும், மொயீன் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Related Cricket News on England vs australia
-
விதியை மீறிய மொயீன் அலி; அபராதம் விதித்த ஐசிசி!
தனது கையை உலர்த்துவற்கு நடுவர்கள் அனுமதியின்றி உலர்த்துவதற்கான திரவத்தை கையில் தெளித்த இங்கிலாந்து வீரர் மொயீன் அலிக்கு அவரது இந்த போட்டிக்கான சம்பளத்தில் 25 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஷஸ் 2023: ஆஸ்திரேலியாவை 386 ரன்களில் கட்டுப்படுத்தியது இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
என்னால் ரன்கள் சேர்க்க முடியும் என்பதை காட்ட விரும்பினேன் - உஸ்மான் கவாஜா!
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் சதமடித்தது குறித்து ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா விளக்கமளித்துள்ளார். ...
-
ஆஷஸ் 2023: இங்கிலாந்தை திணறவைத்த கவாஜா; முன்னிலை நோக்கி ஆஸி!
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களைச் சேர்த்து முன்னுலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ...
-
அதிரடி காட்டிய டிராவிஸ் ஹெட்டை சொல்லி எடுத்த மொயின் அலி; வைரல் காணொளி!
ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் அதிரடியாக ஆடி அரைசதம் விளாசிய டிராவிஸ் ஹெட்டை ஆஃப் ஸ்பின்னரான மொயின் அலி வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
-
வார்னர், லபுஷாக்னேவை வழியனுப்பிய ஸ்டூவர்ட் பிராட் ; வைரல் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடக்கத்திலேயே தொடர்ச்சியாக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணிக்கு நெருக்கடி கொடுத்துள்ளார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். ...
-
போலண்ட் பந்துவீச்சில் கூலாக சிக்சர் அடித்த ரூட்; வைரல் காணொளி!
ஆஸ்திரேலியா பவுலர் ஸ்காட் போலண்ட் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை தேர்ட் மேன் திசையில், பவுண்டரி லைனுக்கு வெளியே அனுப்பி ஜோ ரூட் மிரட்டினார். ...
-
ஸ்டோக்ஸின் முடிவில் எந்த ஆச்சரியமும் இல்லை - ஜானி பேர்ஸ்டோவ்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 393 ரன்கள் குவித்திருந்த நிலையில், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் திடீரென டிக்ளேர் செய்தது குறித்து அந்த அணியின் பேர்ஸ்டோவ் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
Ton-Up Root Revives England Before Stokes Declares In Ashes Opener
Joe Root ended his Ashes century-drought as England made 393-8 before skipper Ben Stokes's bold declaration on the opening day of the first Test against Australia at Edgbaston on Friday. England w ...
-
ஆஷஸ் 2023: சதமடித்து அசத்திய ஜோ ரூட்; 393 ரன்களில் டிக்ளர் செய்த இங்கிலாந்து!
ஆஸ்திரெலிய அணிக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 393 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்தனர். ...
-
Ashes 2023: ப்ரூக்கின் சவாலுக்கு பந்துவீச்சில் பதிலடி கொடுத்த லையன்; வைரல் காணொளி!
நாதன் லயன் பந்தில் அடிக்க முயற்சித்து வித்தியாசமான முறையில் அவுட் ஆகியுள்ளார் ஹரி புரூக் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
எதிரணி எதுவாக இருந்தாலும் எங்களுடைய பாஸ்பால் ஆட்டமுறை தொடரும் - பென் ஸ்டோக்ஸ்!
தான் உடற்தகுதி பெற்றுவிட்டதாகவும், ஆஷஸ் தொடரில் பந்து வீசுவேன் என்றும் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளது அந்த அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ...
-
Ashes 2023: ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, முதல் டெஸ்ட்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று பர்மிங்ஹாமில் தொடங்குகிறது. ...
-
எவ்வளவு வேகமாக பந்துவீசுகிறார்களோ, அவ்வளவு வேகமாக பந்து பவுண்டரிக்கு செல்லும் - ஹாரி ப்ரூக்!
நாளை ஆஷஸ் தொடர் தொடங்க உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் பற்றி இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக் கூறியுள்ள கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. ...
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago