Engw vs indw: Cricket News & Match Updates
இங்கிலாந்து vs இந்தியா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
England Women vs India Women 3rd T20I Dream11 Prediction: இந்திய மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றிபெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி இன்று லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதால் இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல முயற்சிக்கும். அதேசமயம் இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...