Manish pandey: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: கேகேஆரை கரைசேர்த்த வெங்கடேஷ், மனீஷ் பாண்டே; மும்பை அணிக்கு 170 ரன்கள் இலக்கு!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 51ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
ஏனெனில் அணியின் நட்சத்திர தொடக்க வீரர் பில் சால்ட் 5 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷி 13 ரன்களிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களிலும் என அடுத்தடுத்து நுவான் துஷாராவின் இரண்டாவது ஓவரில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அதனைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சுனில் நரைன் ஒரு சிக்ஸருடன் 8 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மற்றொரு நட்சத்திர வீரர் ரிங்கு சிங்குவும் 9 ரன்களை மட்டுமே அடித்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். Read More...